Description
திருக்குறளும் பொருட்குறளும் [உலகின் முதல் திருக்குறள் இசை உரை]
“அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என ஒளவையாரால் புகழப்பட்ட உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இதுவரை பல்வேறு அறிஞர் பெருமக்கள் பல்வேறு நிலைகளில் உரைகள் எழுதியிருக்கின்றனர். இன்னும் எழுதயிருக்கின்றனர்.
இதுவரை வந்த உரைகளெல்லாம் படிக்கும் உரைகளாகத்தான் வந்துள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் முதன்முறையாக இரண்டடிக் குறளுக்கு கவிஞர் பா.செம்பையா இரண்டடியில், பாடல் நடையில் பொருளுரைத்து படிக்கும் உரையாகவும் பாடும் உரையாகவும் வழங்கியிருக்கிறார்.
திரைப்படப்பாடல்கள், பக்திப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் என 400 பாடல்களுக்கு மேல் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கும் நூலாசிரியர் பா.செம்பையா ஏழு சீர்கள் கொண்ட செய்யுள் வடிவிலான திருக்குறளுக்கு எட்டு சொற்களில், பாடல் நடையில் குறளுக்கு குறள் அளவிலேயே பொருளுரைத்து தனது திருக்குறளும் பொருட்குறளும்’ எனும் உரை நூல் வாயிலாக கடந்த 2000 ஆண்டுகளில் முதன்முறையாக 1330 குறட்பாக்களுக்கும் இசை உரை வழங்கி சாதனை புரிந்திருக்கிறார்.
ஆசிரியர்: கவிஞர் பா.செம்பையா
Reviews
There are no reviews yet.